சிவமொக்கா-சவலங்கா ரெயில்வே மேம்பால பணி டிசம்பரில் நிறைவடையும் - ராகவேந்திரா எம்.பி. தகவல்
சிவமொக்கா- சவலங்கா ரெயில்வே மேம்பால பணி வருகிற டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என ராகவேந்திரா எம்.பி. கூறினார்.;
சிவமொக்கா-
சிவமொக்கா- சவலங்கா ரெயில்வே மேம்பால பணி வருகிற டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என ராகவேந்திரா எம்.பி. கூறினார்.
ரெயில்வே மேம்பாலம்
சிவமொக்கா டவுனில் இருந்து சவலங்காவுக்கு சாலை செல்கிறது. இந்தசாலை வழியாக மோட்டார் சைக்கிள், கார், பஸ், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகிறது. இதனால் சவலங்கா சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். மேலும் அந்த வழியில் ரெயில்வேகேட் உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிவமொக்கா- சவலங்கா சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள், அப்பகுதி மக்கள் ராகவேந்திரா எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, ராகவேந்திரா எம்.பி. முயற்சியால் சிவமொக்கா-சவலங்கா சாலையில் ரெயில்வே மேம்பாலம் திட்டப்பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக ரூ. 35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. கட்டுமான பணியும் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை சிவமொக்கா- சவலங்கா ரெயில்வே மேம்பால பணிகளை ராகவேந்திரா எம்.பி. பார்வையிட்டார்.
எம்.பி. ஆய்வு செய்தார்
சிவமொக்கா டவுன் உஷா நர்சிங் ஹோம் எதிரே கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை அவர் ஆய்வு செய்தார். பின்னர் ராகவேந்திரா எம்.பி. கூறுகையில், சிவமொக்கா- சவலங்கா சாலையில் உள்ள ரெயில்வேகேட் ஒரு நாளைக்கு 12 முறை திறந்து மூடப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன மணிக்கணக்கில் காத்து கிடக்கின்றன. மேலும் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, வாகன ஓட்டிகளின் கோரிக்கையை ஏற்று சிவமொக்கா- சவலங்கா சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி வருகிற டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும். இதேபோல் காசிபுரா-சோமினகொப்பா ெரயில்வே மேம்பால பணிகள் மற்றும் சிமோகா பழைய ெரயில்வே நிலையம் எதிரே சன்னகிரி செல்லும் சாலையில் ெரயில்வே மேம்பால பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
மேம்பால பணி
இந்த ரெயில்வே மேம்பால பணிகளும் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதற்காக வேலை முழுவீச்சில் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.