'மைசூரு தசரா விழாவுக்கு அனைவரும் வாருங்கள்'; முதல்-மந்திரி சித்தராமையா அழைப்பு

‘மைசூரு தசரா விழாவுக்கு அனைவரும் வாருங்கள்’ என முதல்-மந்திரி சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2023-10-14 18:45 GMT

பெங்களூரு:

உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இந்த விழா வருகிற 24-ந் தேதி வரை நடக்கிறது. கடைசி நாளில் விழாவின் முத்தாய்ப்பாக ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கிறது. இந்த 9 நாட்களும் மைசூருவில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மைசூரு நகர் மின்னொளியில் ஜொலிக்கிறது. இதையொட்டி முதல்-மந்திரி சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கர்நாடக மக்கள் சார்பில் மிகுந்த மகிழ்ச்சியுடன் உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழாவை காண நாட்டு மக்களை அழைக்கிறேன். மைசூரு தசரா வெறும் பண்டிகை மட்டுமல்ல, அது ஒரு அனுபவம். அது கர்நாடக கலாசாரம், பண்பாடு, ஆத்மாவுடன் ஒன்றுபட்டுள்ளது. தசரா வண்ணமயம், ஒலி, உணர்ச்சி ஆகியவை ஒவ்வொரு இதயத்துடன் சேர்ந்து ஒலி அலையை உருவாக்கும். அனைவரும் இந்த பெருமை மிகு விழாவுக்கு வாருங்கள். வேற்றுமையில் ஒற்றுமையை கொண்டாடுவோம். இந்தியாவை கொண்டாடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்