இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; தொழில் அதிபர் கைது

பெங்களூருவில், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-08 15:32 GMT

பெங்களூரு:

பெங்களூரு வித்யாரண்யபுரா பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் அழகு நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் இளம்பெண்ணை தொழில் அதிபரான மஞ்சுநாத் என்பவர் பின்தொடர்ந்து சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியதாக தெரிகிறது. ஆனால் அதற்கு இளம்பெண் மறுத்ததால் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின்பேரில் மஞ்சுநாத் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

ஆனால் அதன்பின்னரும் இளம்பெண்ணை பின்தொடர்ந்து சென்று திருமணம் செய்து கொள்ளும்படி மஞ்சுநாத் வற்புறுத்தி உள்ளார். அப்போதும் இளம்பெண் திருமணத்திற்கு மறுத்ததால் ஆபாசமாக பேசியதுடன், உனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பயந்து போன இளம்பெண் இதுபற்றி வித்யாரண்யபுரா போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் மஞ்சுநாத்தை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்