ஒரு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

சித்ரதுர்காவில் ஒரு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.;

Update:2023-10-16 00:15 IST

சித்ரதுர்கா-

சித்ரதுர்காவில் ஒரு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

தம்பதி

சித்ரதுர்கா (மாவட்டம்) டவுன் முத்தாபுரா பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. இந்தநிலையில் அதேப்பகுதியை சேர்ந்தவர் ஈசப்பா (வயது24). இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரும் ஒரு வயது குழந்தையின் தந்தையும், வேலைக்கு ஒன்றாக செல்வது வழக்கம். இதனால் அவர்கள் 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். ஈசப்பா அவரின் வீட்டிற்கு அடிக்கடி செல்வது வழக்கம்.

இந்தநிலையில், கடந்த 2022- ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி ஈசப்பா  மற்றும் அவரது நண்பரும் சித்ரதுர்கா டவுனுக்கு வேலைக்கு சென்றனர். பின்னர் இரவு பணிமுடிந்து 2 பேரும் வீட்டிற்கு வந்தனர். இதையடுத்து அருகே உள்ள ஓட்டலுக்கு குழந்தையின் தந்தை உணவு வாங்க சென்றார். குழந்தையின் தயாரும் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார்.

பாலியல் தொல்லை

அப்போது, ஈசப்பா நண்பரின் வீட்டிற்கு சென்றார். அங்கு குழந்தை தூங்கி கொண்டிருந்தாள். அப்போது குழந்தைக்கு ஈசப்பா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் குழந்தை கதறி அழுதாள். இந்த சத்தத்தை கேட்ட தாயார் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது ஈசப்பா வீட்டில் இருந்து வெளியே ஓடினார். இதையடுத்து குழந்தையை தாயார் பார்த்தார்.

அப்போது, குழந்தை மயங்கிய நிலையில் கிடந்தாள். இதையடுத்து குழந்தையை சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றாள். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது என டாக்டர் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார் இதுகுறித்து சித்ரதுர்கா புறநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஈசப்பாவை கைது செய்தனர்.

சிறையில் அடைத்தனர்

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு சித்ரதுர்கா போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி கோமலா தீர்ப்பு கூறினார். அதில், ஒரு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஈசப்பாவிற்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்