பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்-வாலிபர் கைது

மங்களூரு அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ததாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-10-17 21:22 IST

மங்களூரு;-

மாணவி பலாத்காரம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை அடுத்த கடபா பகுதியை சேர்ந்தவர் யக்னேஷ். அதே பகுதியில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவள் பெற்றோருடன் வசித்து வந்தாள். இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டது. இதை பயன்படுத்தி கொண்ட யக்னேஷ், அடிக்கடி மாணவியை வெளியே அழைத்து சென்று வந்தார். அப்போது மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தை வெளியே கூறக்கூடாது என்று யக்னேஷ் மிரட்டியுள்ளார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற மாணவிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று காண்பித்தனர். அப்போது அங்கு மாணவியின் உடலை பரிசோதனை செய்த டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக கூறினார். இதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக கூறினார்.

வாலிபர் கைது

-இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது மாணவி யக்னேஷ் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறினார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் கடபா போலீசில் இதுகுறித்து புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் வாலிபர் யக்னேசை கைது செய்தனர்.

விசாரணையில் யக்னேஷ் பெங்களூருவை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. கடபாவில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து யக்னேஷ் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்