தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.6 லட்சம் மோசடி
பெங்களூருவில், தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு கங்கொண்டனஹள்ளியை சேர்ந்தவர் சையத் நஸ்ரேத் (வயது 34). தனியார் நிறுவன ஊழியர். சமீபத்தில் இவரை ஒரு இளம்பெண் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்கலாம் என்று இளம்பெண் சையத் நஸ்ரேத்திடம் ஆசை வார்த்தைகளை கூறினார்.
பின்னர் தான் அனுப்பும் லிங்கில் வங்கி கணக்கு மற்றும் சொந்த தகவல்களை தெரிவிக்கும்படி இளம்பெண் கூறினார். அதன்படி, அவரும் செய்தாா். இந்த நிலையில், சையத் நஸ்ரேத் வங்கி கணக்கில் இருந்த ரூ.6.18 லட்சத்தை எடுத்து இளம்பெண் மோசடி செய்து விட்டார். இதுதொடர்பாக மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடிவருகிறார்கள்.