பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல்
பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரு:
துபாயில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை வருவாய் நுண்ணறிவு இயக்குனரக அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததால் அவரிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது அவர், உடைமைகளில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த பயணியிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 1½ கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பயணி கர்நாடக-கேரள எல்லையில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.