சாலை பள்ளங்களை மூட 225 வார்டுகளுக்கு தலா ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு

பெங்களூருவில் சாலை பள்ளங்களை மூட 225 வார்டுகளுக்கு தலா ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கி மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2023-10-24 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூரு நகரில் உள்ள பல்வேறு சாலைகளில் மீண்டும் பள்ளங்களும், குழிகளும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நகரில் பல சாலைகளில் போக்குவரத்து நெரிசலும், சில சாலைகளில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, பெங்களூருவில் உள்ள சாலைகளில் பள்ளங்களை மூடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தது. இதையடுத்து, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத்துடன் ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்த நிலையில், பெங்களூரு மாநகராட்சியில் உள்ள 225 வார்டுகளிலும் சாலை பள்ளங்களை மூடவும், சீரமைக்கவும் தலா ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டுகளிலும் உள்ள சாலைகளை சீரமைக்க தலா ரூ.15 லட்சம் ஒதுக்கி இருப்பதை மாநகராட்சி தலைமை கமிஷனர் உறுதிப்படுத்தி உள்ளார். இதையடுத்து, நவம்பர் மாதத்தில் இருந்து சாலைகள் சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு (2022) ஒவ்வொரு வார்டுகளுக்கும் தலா ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது ரூ.5 லட்சம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்