சாக்கடை கால்வாயில் இருந்து அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு; யார் அவர்? போலீஸ் விசாரணை

சாக்கடை கால்வாயில் இருந்து அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்கப்பட்டது. யார் அவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-07-06 15:25 GMT

பெங்களூரு:

பெங்களூரு காடுகோடி அருகே பெல்லத்தூர் பகுதியில் ஓடும் சாக்கடை கால்வாயில் உடல் அழுகிய நிலையில் ஒரு ஆண் இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் காடுகோடி போலீசார் அங்கு சென்று சாக்கடை கால்வாயில் கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபருக்கு 40 முதல் 50 வயது இருக்கும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

ஆனால் அவர் யார்? எந்தப்பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அவரை யாராவது கொலை செய்து உடலை சாக்கடை கால்வாயில் வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். சம்பவம் குறித்து காடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்