பொதுசேவை மையம், அரசு அலுவலகங்கள் மக்களுக்கு சேவை செய்வதற்குதான்- வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பேட்டி

பொதுசேவை மையம், அரசு அலுவலகங்கள் மக்களுக்கு சேவை செய்வதற்குதான் என்று வருவாய்துறை மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார்.

Update: 2022-08-14 17:55 GMT

மண்டியா:

பொதுசேவை மையம்

மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா பாரதிநகர் பகுதியில் ரூ.18 கோடி செலவில் அரசு சேவைகளை பொதுமக்கள் உடனே பெறும் நோக்கில் தொடங்கப்பட்ட பொதுசேவை மையக்கட்டிடத்தை வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் திறந்து வைத்தார். இதைதொடர்ந்து அவர் பேசியதாவது:- கர்நாடகத்தில் பொதுமக்களின் வீடு தேடி வருவாய் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி திட்டங்கள் மக்களின் இல்லம் தேடி வருகிறது. சில இடங்களில் பொதுமக்களுக்கு எப்படி அரசு திட்டங்களை பயன்படுத்துவது என்று தெரியவில்லை. மேலும் அரசு வழங்கும் நிதிகள், சலுகைகள் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்காக இந்த பொது சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் இருப்பது பொதுமக்களுக்கு சேவை செய்வதற்குதான். அதன்படி இந்த பொதுசேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டு பட்டா, ஓய்வூதியம், திராவகம் வீச்சில் காயமடைந்தவர்களுக்கான சலுகைகள், பெறுவதற்கு 3 மாதங்கள் அலையவேண்டும். ஆனால் பொதுசேவை மையம் மூலம் 3 நாட்களில் வாங்கி கொள்ளலாம்.

ரூ.10 ஆயிரம் நிதி உதவி

திராவகம் வீச்சில் காயமடைந்தவர்களுக்கு இதுவரை ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது இனிமேல் அந்த உதவித்தொகை ரூ.10 ஆயிரமாக வழங்கப்படும். மேலும் பல புதிய திட்டங்களை மாநில அரசு வருவாய் துறையின் வாயிலாக மண்டியா மாவட்டத்திற்கு கொண்டுவர இருக்கிறது. கிராம தங்கள் நிகழ்ச்சி மூலம் மக்களின் குறைகளை கேட்டறிந்து நலதிட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. உடனே தேவைகள் நிறைவேற்றி கொடுக்கப்படுகிறது. விரைவில் நானும் கிராமங்கள் தோறும்

சென்று ஆய்வு செய்ய இருக்கிறேன். அதன்படி ஒவ்வொரு கிராமத்தின் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதேபோல மண்டியா மாவட்டத்தில் புதிதாக அரசு பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் கட்டி கொடுக்கப்படும். நீர்பாசன திட்டத்தை மேம்படுத்தி விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் புதிய கொள்கைகள் கொண்டுவரப்படும். நாளை(இன்று) அனைவரும் 75-வது சுதந்திர தினவிழாவை கொண்டாட இருக்கிறோம். மக்கள் அனைவருக்கும் சுதந்திர தினவிழா நல்வாழ்த்துகள். இந்த நல்ல நாளில் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை வைத்து, நாட்டுப்பற்றை வெளி கொண்டுவரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்