இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு: அதிகாரிகளுக்கு ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி வேண்டுகோள்
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் குறித்து வீடுகள்தோறும் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி நாகமோகன் தாஸ் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
கோலார் தங்கவயல்:
ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி
கோலாரில் நேற்று 75-வது சுதந்திர தின பவளவிழாவையொட்டி நாட்டு மக்களுக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி நாகமோகன் தாஸ் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகையில் கூறியதாவது:- இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 75-வது ஆண்டில் தான் நாட்டு மக்களில் ஓரளவுக்கு சுந்தந்திர இந்தியாவை பற்றி தெரிந்துகொண்டுள்ளனர். நாட்டில் இன்னும் 60 சதவீதம் பேருக்கு சுந்திரம் கிடைத்ததால் ஏற்படும் நன்மைகள் குறித்த விவரங்கள் தெரியவில்லை.
விழிப்புணர்வு
எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்திய அரசியலமைப்பு குறித்து வீடுகள் தோறும் சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு இந்தியனும் நமது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டியது அவசிமாகும். நாட்டில் உள்ள அனைவருக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மூலம் கிடைக்கும் பாதுகாப்பை தெரிந்து கொள்ள ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், மக்கள் பிரதிநிதிகள் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பாடுபடவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.