மாணவியை நாயை விட்டு கடிக்க வைத்த கோழிப்பணை உரிமையாளர் கைது

மாணவியை வளர்ப்பு நாயை ஏவி கடிக்க வைத்த கோழிப்பண்ணை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-14 22:38 GMT

ராமநகர்:-

ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா பல்லுபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி லீலாவதி. இவர்கள் 2 பேரும் ராமநகர் மாவட்டம் மாகடி அருகே கோழிப்பண்ணையில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களது மகள் வீணா (வயது 15). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், அதேப்பகுதியை சேர்ந்த மற்றொரு கோழிப்பண்ணை உரிமையாளர் நாகராஜ், சுரேஷ்-லீலாவதி தம்பதியை தனது கோழிப்பண்ணைக்கு வேலைக்கு வரும்படி அழைத்துள்ளார். ஆனால், அவர்கள் வேலைக்கு செல்ல மறுத்ததாக தெரிகிறது. இதனால் அவர்கள் மீது நாகராஜ் ஆத்திரத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீணா பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது பெற்றோர் மீதுள்ள ஆத்திரத்தில் நாகராஜ், தனது வளர்ப்பு நாயை மாணவி வீணாவை கடிக்க ஏவி உள்ளார். அந்த நாய், வீணாவை கடித்து குதறியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மாகடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், மாகடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோழிப்பண்ணை உரிமையாளர் நாகராஜை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்