திராவகம் வீச்சில் பாதித்த பெண்ணுக்கு ரத்த தானம் செய்த போலீசார்

பெங்களூருவில் திராவகம் வீச்சில் பாதித்த பெண்ணுக்கு போலீசார் ஒருவர் ரத்த தானம் செய்தார்.;

Update:2022-06-17 20:40 IST

பெங்களூரு:

பெங்களூரு ஹெக்கனகட்டே கிராசில் வசித்து வரும் 25 வயது இளம்பெண் மீது காதலிக்க மறுத்த ஆத்திரத்தில் நாகேஷ் என்பவர் திராவகம் வீசினார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த இளம்பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே முக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. இதற்காக அந்த பெண்ணுக்கு ரத்தம் தேவைப்பட்டு இருந்தது. இதுபற்றி அறிந்த காமாட்சிபாளையா போலீசார் அந்த இளம்பெண்ணுக்காக ரத்தத்தை தானமாக கொடுத்தனர். போலீசாரின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்