தலையணையால் அமுக்கி ஒடிசா பெண் கொலை

பெங்களூரு தலையணையால் அமுக்கி ஒடிசா பெண் கொலை செய்த வழக்கில் நண்பரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-06-13 14:56 GMT

பெங்களூரு:

பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெயில் நிலையம் அருகே ஒரு தனியார் தங்கும் விடுதி உள்ளது. அங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பாக ஒரு பெண்ணும், வாலிபரும் அறை எடுத்து தங்கினார்கள். நேற்று அவர்கள் தங்கி இருந்த அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தங்கும் விடுதி ஊழியர்கள், தங்களிடம் இருந்த அறையின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு அந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் யஷ்வந்தபுரம் போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தீபா பதன் (வயது 37) என்று தெரிந்தது. மேலும் அவர் தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தீபாவுடன் தங்கி இருந்த நபரே, அவரை கொலை செய்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. அவர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்?, என்ன காரணத்திற்காக தீபாவை அவர் கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து யஷ்வந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட தீபாவின் நண்பரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்