பெங்களூரு விமான நிலையத்தில் ஆக்சிஜன் உபகரணங்கள்

இதய பாதிப்பு ஏற்படும் பயணிகளின் அவசர தேவைக்காக பெங்களூரு விமான நிலையத்தில் ஆக்சிஜன் உபகரணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-06-28 16:43 GMT

பெங்களூரு:

நாட்டில் பரபரப்பாக இயங்கும் சர்வதேச விமான நிலையங்களில் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையமும் ஒன்று. அங்கிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதனால் அங்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு பயணிகள் சிலருக்கு இதய நோய் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது.

அத்தகைய நோயாளிகளுக்கு அவசர தேவைக்கு பயன்படுத்துவதற்காக பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் ஆக்சிஜன் உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விமானங்கள் புறப்பாடு மற்றும் வருகை பகுதிகளில் இந்த உபகரணங்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன. மாரடைப்பு, மூச்சுத்திணறல், மயக்கம் போன்ற பாதிப்புக்கு ஆளாவோருக்கு உடனடியாக ஆக்சிஜன் வழங்கப்படும். அந்த எந்திரங்கள் 99.7 சதவீத தூய்மையான ஆக்சிஜனை வழங்கக்கூடிய மருத்துவ உபகரணம் ஆகும். இது 40 நிமிடங்கள் வரை ஆக்சிஜனை வழங்கும்.

மேற்கொண்ட இந்த தகவலை பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்