மகிஷா தசரா அமைதியாக நடந்து முடிந்தது ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மகிஷா தசரா விழா அமைதியாக நடந்து முடிந்தது. இ்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.;

Update:2023-10-14 00:15 IST

மைசூரு

மகிஷா தசரா விழா

மைசூருவில் ஆண்டுதோறும் விஜயதசமியையொட்டி தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதேப்போல் தசரா விழாவிற்கு முன்னதாகவே மகிஷா தசரா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை தலித் அமைப்பினர் கொண்டாடி வருகிறார்கள்.

இந்தநிலையில் இந்த ஆண்டு மகிஷா தசரா விழாவை சாமுண்டி மலையில் கொண்டாடுவதற்கு பிரதாப் சிம்ஹா எம்.பி. எதிர்்ப்பு தெரிவித்தார்.

மேலும் மகிஷா தசரா விழா நடைபெறும் நாளில் சாமுண்டி மலையில் இந்து அமைப்பினர் சார்பில் ஊர்வலம் நடத்தப்படும் எனவும், இந்த விழாவை நடத்த அனுமதி வழங்கக்கூடாது எனவும் அவர் கூறினார். இதற்கு தலித் அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில், மகிஷா தசரா விழா நடத்த போலீசார் அனுமதி வழங்கினா். ஆனால் சாமுண்டி மலையில் மகிஷா தசரா நடத்த அனுமதி வழங்கவில்லை.

அனுமதி வழங்கப்பட்டது

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை காரணமாக டவுன்ஹாலில் உள்ள அம்பேத்கர் சிலை வளாகத்தில் மகிஷா தசரா கொண்டாட அனுமதி வழங்கப்பட்டது. இந்தநிலையில், நேற்று மகிஷா தசரா விழா டவுன்ஹால் அம்பேத்கர் சிலை வளாகம் அருகே கொண்டாடப்பட்டது.

முன்னதாக அம்பேத்கர், புத்தர், மகிஷாசூரன் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மகிஷா தசரா விழாவை முன்னாள் மேயரும், மகிஷா தசரா கமிட்டி குழு தலைவருமான புருஷோத்தம்,காந்தி நகர் ஒரு லிங்கி பேத்தி மடத்தின் மடாதிபதி ஞான பிரகாஷ் சுவாமி, போதி சத்துவா புத்த பிக்கு வந்தேஜி, நாவல் எழுத்தாளர் கே.எஸ். பகவான், பேராசிரியர் மகேஷ் சந்திரகுரு ஆகியோர் மலர் தூவி தொடங்கி வைத்தனர்.

அசம்பாவிதங்கள் இன்றி நடந்தது

இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், மகிஷாசூரன் என்பவன் ராட்சசன் அல்ல மக்களின் ரட்சகன், அசோகர் காலத்தில் மகாதேவா என்ற புத்த விக்குவை தென் பகுதிக்கு அனுப்பி வைத்து புத்தரின் தத்துவங்களை பிரசாரம் செய்தார்.

மகிஷா தசரா விழா பெரியஅளவில் நடைபெறுவதற்கு காரணமாக இருந்த பிரதாப் சிம்ஹா எம்.பி.க்கு நன்றியை தெரிவிக்கிறோம், என்றனர். மைசூருவில் மகிஷா தசரா விழா எந்தவித அசம்பாவிதங்கள் இன்றி நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்