திராவகம் வீச்சு சம்பவங்களுக்கான சட்டங்கள் கடுமையாக்கப்படும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

திராவகம் வீச்சு சம்பவங்களுக்கான சட்டங்கள் கடுமையாக்கப்படும் என முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

Update: 2022-06-11 15:21 GMT

பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெலகாவிக்கு சென்றார். இதற்காக அவர் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி விமான நிலையத்திற்கு வந்தார். உப்பள்ளி விமான நிலையத்தில் வைத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூருவில் கடந்த 6 வாரங்களுக்குள் அடுத்தடுத்து 2 திராவகம் வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த 2 சம்பவங்களும் எதிர்பாராத விதமாக நடந்தவை. திராவகம் வீச்சு சம்பவங்களை கையாளும் சட்டங்கள் கடுமையாக்கப்படும். ஏற்கனவே உள்ள சட்டங்களில் திருத்தம் செய்து அதை இன்னும் கடுமையாக்க வேண்டும். இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். மேலும் 2 பெண்கள் மீது திராவகம் வீசிய நபர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரவும் அறிவுறுத்தி இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்