பா.ஜனதா-ஜனதாதளம்(எஸ்) கூட்டணிக்கு கேரள சி.பி.எம். ஆதரவா?-தேவேகவுடா விளக்கம்

Update: 2023-10-21 18:45 GMT

பெங்களூரு:-

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன், ஜனதா தளம் (எஸ்) கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இந்த நிலையில், பா.ஜனதாவுடனான கூட்டணிக்கு கேரளாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சி.பி.எம்.) கட்சி ஆதரித்திருப்பதாக முன்னாள் பிரதமர் தேவேகவுடா தெரிவித்துள்ளதாக தகவல் பரவியது. இந்த விவகாரம் கேரளாவில் ஆளும் கட்சியாக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்டு கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடா தனது எக்ஸ் தளத்தில் நேற்று விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- பா.ஜனதா மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சி கூட்டணி விவகாரத்தில், நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு கேரளாவில் சில பிரச்சினைகளை ஏற்படுத்தி இருக்கிறது. என்னுடைய கம்யூனிஸ்டு நண்பர்களே, பா.ஜனதா மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணியை கேரளாவில் ஆளும் கட்சியாக இருக்கும் சி.பி.எம். கட்சி ஆதரித்து இருப்பதாக நான் ஒரு போதும் கூறவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்