கன்னட சாகித்ய பரிஷத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் தலைவர் மகேஷ் ஜோஷி பேட்டி

கன்னட சாகித்ய பரிஷத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று தலைவர் மகேஷ் ஜோஷி தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-10 17:42 GMT

மண்டியா:

மண்டியா டவுன் பி.ஆர்.அம்பேத்கர் பவனில் கன்னட சாகித்ய பரிஷத் சார்பில் 2021-22-ம் கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பி.யூ.சி. தேர்வில் கன்னட மொழிப்பாடத்தில் 100 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், மாவட்ட மற்றும் தாலுகா அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் பிற பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் பாராட்டுவிழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட கன்னட சாகித்ய பரிஷத் தலைவர் மகேஷ் ஜோஷி கலந்துகொண்டு மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கி பேசியதாவது:-

மறைந்த மைசூரு மன்னர் நால்வாடி கிருஷ்ணராஜா உடையாரால் உருவாக்கப்பட்ட கன்னட சாகித்ய பரிஷத், சர்.எம் விஸ்வேஸ்வரய்யாவின் வழிகாட்டுதலின்படி இன்றுவரை செயல்பட்டு வருகிறது. கன்னட சாகித்ய பரிஷத்துக்கு தனி வரலாறு உண்டு. கன்னட மொழியை பாதுகாத்து அதை வளர்ச்சி அடைய செய்யும் பொறுப்பு கன்னட சாகித்ய பரிஷத்திற்கு உள்ளது. முதல்-மந்திரி மற்றும் அரசு சார்பில் கன்னட சாகித்ய பரிஷத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. கன்னட சாகித்ய பரிஷத் தனி பிரதிநிதித்துவ அமைப்பாகும். இதற்கு கன்னடர்கள் முக்கியத்துவம் கொடுப்பதுடன் அதன் அடையாளத்தையும் பாதுகாக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்