ஜீப் - ஸ்கூட்டர் மோதல்; விவசாயி பரிதாப சாவு

ஜீப்-ஸ்கூட்டர் மோதியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.;

Update:2022-08-09 23:22 IST

மங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா கும்பலட்கா பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 38). விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலையில் பண்ட்வால் தாலுகா கடூர்-காஞ்சங்காடு நெடுஞ்சாலையில் விட்டலா அருகே உக்குடா சோதனைச்சாவடி பகுதியில் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு ஜீப் எதிர்பாராத விதமாக தினேசின் ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட தினேஷ் படுகாயம் அடைந்தார்.

அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தேரளகட்டேவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தினேஷ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பண்ட்வால் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்