அரசு விளம்பரத்தில் நேரு படம் இடம் பெறவில்லையா?; பா.ஜனதா விளக்கம்

அரசு விளம்பரத்தில் நேரு படம் இடம் பெறவில்லையா? என்ற கேள்விக்கு பா.ஜனதா விளக்கம் அளித்துள்ளது.

Update: 2022-08-14 16:04 GMT

பெங்களூரு:

கர்நாடக பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் எம்.ஜி.மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுதந்திர தின விழாவையொட்டி அரசால் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில் நேருவின் படம் வரைபடத்தில் இடம் பெற்றுள்ளது. ஆனால் நேரு படம் விளம்பரத்தில் இடம் பெறவில்லை என்று காங்கிரசார் குறை கூறுகிறார்கள். காங்கிரசார் எப்போதும் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே விசுவாசமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒட்டுமொத்த நாட்டு நலனில் அக்கறை இல்லை. முக்கிய சுதந்திர போராட்ட தியாகிகளின் படங்களை ஒருங்கிணைத்து அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு ஆட்சி செய்தவர்கள் இதை செய்யவில்லை. காங்கிரசார் சுதந்திர தின விழாவை ஒரு குடும்பத்திற்காக மட்டுமே கொண்டாடி வந்தனர். சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய சர்தார் வல்லபாய் பட்டேலை காங்கிரசார் இத்தனை ஆண்டுகளாக புறக்கணித்து வந்தனர்.

நாட்டிற்கு அரசியல் சாசனத்தை வழங்கிய அம்பேத்கரையே காங்கிரஸ் கட்சி தோற்கடித்தது. நாடு சுதந்திரம் அடைந்ததும் காங்கிரசை கலைக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறினார். அவரது கூற்றுப்படி காங்கிரஸ் கட்சி மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எம்.ஜி.மகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்