சிக்கமகளூருவில் சுதந்திர தின விழா கோலாகலம்

சிக்கமகளூருவில் சுதந்திர தினவிழா கோலாகலமாக நடந்தது.

Update: 2022-08-15 17:20 GMT

சிக்கமகளூரு:

சிக்கமகளூரு டவுனில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட கலெக்டர் ரமேஷ் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதையடுத்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

இதில் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது கலைத்திறமையை வெளிப்படுத்தினர்.

விழாவில் கலெக்டர் ரமேஷ் பேசுகையில், 'நம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில் சுதந்திரத்திற்கு என பாடுபட்ட மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் உட்பட்ட சுதந்திரத்திற்காக போராடிய யாரையும் மறக்கக்கூடாது. சிக்கமகளூரு மாவட்டத்திற்கு மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றன. அவற்றை மக்கள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்' என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்