தபால் அலுவலக வங்கி கணக்குகளில் தாமதமாக கிடைக்கும் அரசு உதவித்தொகை

கர்நாடக அரசு சார்பில் முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது. மாதந்தோறும் அவர்களுக்கான உதவித்தொகை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

Update: 2023-10-19 18:45 GMT

கோலார் தங்கவயல்:

கர்நாடக அரசு சார்பில் முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது. மாதந்தோறும் அவர்களுக்கான உதவித்தொகை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர இல்லத்தரசிகளுக்கான மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை, பி.பி.எல். ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசிக்கு பதில் பணம் உள்ளிட்டவையும் நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. கோலார் தங்கவயல் முழுவதும் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் தபால் நிலையங்கள் மூலம் நடைபெறும் வங்கி கணக்குகளை சமர்ப்பித்துள்ளனர். அவர்களது வங்கி கணக்குகளுக்கு சரியாக எந்தவித உதவித்தொகையும் வந்து சேரவில்லை என்றும், மேலும் சிலருக்கு தாமதமாக பணம் வந்து சேர்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பயனாளிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கோலார் தங்கவயலில் மாரிக்குப்பம், சாமியன், ஆண்டர்சன்பேட்டை, கோரமண்டல், ராபர்ட்சன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தபால் அலுவலகங்கள் இயங்கி வருகிறது. அந்த தபால் அலுவலகங்களில் தான் இதுபோன்ற பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பயனாளிகள் அவதி அடைந்துள்ளனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-------------------------------------

மேலும் செய்திகள்