மைனர் பெண் கற்பழிப்பு வழக்கில்-டிரைவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை

மைனர் பெண்ணை கற்பழித்த வழக்கில் டிரைவருக்கு 20 ஆண்டு சிறைதண்டணை விதித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-06-28 16:47 GMT

பெங்களூரு:

பெங்களூரு பனசங்கரி 3-வது ஸ்டேஜ் இட்டமடுகு பகுதியை சேர்ந்தவர் பிரீத்தம் பாபு என்கிற சிட்டி பாபு (வயது 35). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் பிரீத்தம் பாபுவுக்கு ஜெயநகரை சேர்ந்த ஒரு மைனர் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருந்தது. பின்னர் மைனர் பெண்ணிடம் உன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் பிரீத்தம் பாபு கூறியுள்ளார். ஆனால் இதற்கு மைனர் பெண் மறுத்து உள்ளார். இதனால் உனது குடும்பத்தினரை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அடிக்கடி மைனர் பெண்ணை பிரீத்தம் பாபு கற்பழித்து வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் ஜெயநகர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பிரீத்தம் பாபுவை கைது செய்து இருந்தனர். அவர் மீது பெங்களூரு விரைவு கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்து இருந்தனர். இந்த சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு நடந்து இருந்தது. 5 ஆண்டுகள் நடந்து வந்த இ்ந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் பிரீத்தம் பாபு மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகி உள்ளதாக கூறி அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்கால் சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு கர்நாடக சட்ட சேவை ஆணையம் ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்