பெங்களூரு ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடினால் அசம்பாவிதங்கள் நடைபெற வாய்ப்பு

ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடினால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கர்நாடக அரசுக்கு உளவுத்துைற பரபரப்பு அறிக்கை அளித்துள்ளது.;

Update:2022-08-28 22:33 IST

பெங்களூரு:

ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானம் வருவாய்த்துறைக்கு சொந்தம் என்று மாநகராட்சி அறிவித்தது. இதையடுத்து, அங்கு கடந்த 15-ந் தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி வழங்க வேண்டும் என்று இந்து அமைப்புகள், அரசுக்கு வலியுறுத்தி வருகின்றன.

கர்நாடக ஐகோர்ட்டும், ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி வழங்குவது குறித்து அரசே முடிவு செய்யலாம் என்று உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இதுபற்றி நாளை (செவ்வாய்க்கிழமை) அரசு இறுதி முடிவு எடுக்க உள்ளது.

உளவுத்துறை அறிக்கை

இந்த நிலையில், ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி வழங்கினால், பெங்களூருவில் அசம்பாவிதங்ககள் நடைபெற வாய்ப்புள்ளதாக அரசுக்கு, உளவுத்துறை போலீசார் அரசுக்கு அறிக்கை அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் பரபரப்பு தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, ஈத்கா மைதானத்தில் 75-வது ஆண்டு சுதந்திர தினவிழா நடைபெற்றதால், அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எந்த பிரச்சினையும் நடைபெறவில்லை. ஆனால் அங்கு விநாயகா் சதுர்த்தி கொண்டாட எதிா்ப்பு கிளம்பி உள்ளதால், அதற்கு அனுமதி வழங்கினால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், இதன் மூலம் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் உளவுத்துறை தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்