இனி கட்சியை வலுப்படுத்த தீவிரமாக பணியாற்றுவேன்; மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு குமாரசாமி பேட்டி

இனி கட்சியை வலுப்படுத்த தீவிரமாக பணியாற்றுவேன் என்று மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு குமாரசாமி தெரிவித்துள்ளார்.;

Update:2023-10-20 00:15 IST

பெங்களூரு:

ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தற்காலிக மாநில தலைவராக குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சி தலைவராக பொறுப்பேற்ற பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எங்கள் கட்சியில் எனது தலைமையில் புதிய மாநில குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைவரின் நம்பிக்கை பெற்று கட்சியை வழிநடத்துவேன். தேசிய தலைவரின் உத்தரவுப்படி கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவேன். கட்சி நிர்வாகிகளின் ஒப்புதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இனி கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபடுவேன்.

எங்களை பார்த்து காங்கிரசார் குடும்ப அரசியல் என்று சொல்கிறார்கள். காங்கிரசில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?. குடும்ப அரசியல் பற்றி பேச அவர்களுக்கு என்ன தார்மிக உரிமை உள்ளது. கர்நாடகத்தின் பிரச்சினைகளை மனதில் கொண்டு தீவிரமாக செயலாற்ற முடிவு செய்துள்ளோம். எங்கள் கட்சியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் நாங்கள் கட்சி பணியாற்ற உள்ளோம்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்