வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
பெங்களூருவில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டிய சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு ஆர்.எம்.சி. யார்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணன் நாயக். இவர் தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று இருந்தார். அப்போது வீட்டின் சாவியை ஜன்னல் ஓரமாக வைத்து சென்று இருந்தார். இதனை கவனித்த மர்மநபர்கள் அந்த சாவியை பயன்படுத்தி வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் வீட்டில் இருந்த 42 கிராம் தங்கநகைகள், ரூ.50 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஆர்.எம்.சி.யார்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.