ஓட்டல், உணவகங்களில் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது-கலெக்டர் அஸ்வதி உத்தரவு

மண்டியாவில் ஓட்டல், உணவகங்களில் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என்று கலெக்டர் அஸ்வதி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-08-24 17:40 GMT

மண்டியா:

சேவை கட்டணம்

மண்டியா மாவட்டத்தில் உள்ள ஓட்டல் மற்றும் உணவகங்களில் சேவை கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. மேலும் சிலர் சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த நிலையில் மண்டியா மாவட்ட கலெக்டர் அஸ்வதி ஓட்டல், உணவகங்களில் சேவை கட்டணம் வசூலிக்ககூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கலெக்டர் உத்தரவு

இதுகுறித்து அவர் கூறியதாவது:- மண்டியாவில் சில ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் வாடிக்கையாளர்களிடம் இருந்து சேவை கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகிறது. சட்டப்படி வாடிக்கையாளர்களிடம் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது. இது நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 விதி எண் 19-ஐ மீறுவதாகும். அதேநேரம் சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டதை வாடிக்கையாளர்கள் அறிந்தால் உடனே நூகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடரலாம். அதற்கான அனைத்து உரிமையும் வாடிக்கையாளர்களுக்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்