பயங்கரவாத தடுப்பு உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம்
பயங்கரவாத தடுப்பு உயர்மட்ட குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் அங்கோலாவில் நடந்து வருகிறது. இதில் சுமலதா எம்.பி. பங்கேற்றுள்ளார்.;
மண்டியா:-
சுமலதா எம்.பி.
மண்டியா மாவட்ட எம்.பி.யாக இருந்து வருபவர் சுமலதா அம்பரீஷ். இவர் மறைந்த நடிகரும், மத்திய-மாநில மந்திரியுமான அம்பரீஷின் மனைவி ஆவார். மேலும் சுமலதாவும் நடிகை ஆவார். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக மண்டியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஆவார்.
தற்போது அவர் பயங்கரவாத தடுப்பு உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக நடைபெறும் கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு, ஆதரவற்ற குழந்தைகள் கடத்தப்படுவதை தடுத்தல் உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பேன் என்று கூறியிருந்தார்.
ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் அங்கோலாவில் பயங்கரவாதம் தடுப்பு உயர்மட்ட ஆலோசனை குழுவின் முதல் கூட்டம் நடந்தது. இதில் சுமலதா அம்பரீஷ் எம்.பி. கலந்து கொண்டார். இந்த கூட்டம் நாளை(வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சுமலதா எம்.பி., பெண்கள் பாதுகாப்பு, பயங்கரவாதம் தடுப்பு உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசி இருப்பதாக கூறப்படுகிறது.