மைசூருவில் கனமழை; வீடு இடிந்தது-தம்பதி உயிர் தப்பினர்

மைசூருவில் கனமழை பெய்தது. எச்.டி.கோட்டை தாலுகாவில் வீடு இடிந்தது. அதிர்ஷ்டவசமாக தம்பதி உயிர் தப்பினர்.;

Update:2022-09-07 23:18 IST

மைசூரு:

தொடர் கனமழை

கர்நாடகத்தில் தொடர்ந்து சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதுபோல் மைசூரு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை கொட்டு வருகிறது. தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. முதலில் லேசாக பெய்ய ஆரம்பித்த மழை பின்னர் கனமழையாக கொட்டி திர்த்தது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. மழை நின்றபிறகு குளிர்ந்த காற்று வீசியபடி இருந்தது.

வீடு இடிந்தது

இந்த மழையால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள், வியாபாரிகள் என பலரும் பாதிக்கப்பட்டனர். மேலும் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டன.

சில கிராமங்களில் வீடுகள் இடிந்தன. வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. எச்.டி.கோட்டை தாலுகா மொத்தே கிராமத்தில் லக்கேகவுடா - நாகம்மா தம்பதிக்கு சொந்தமான குடிசை வீடு இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக தம்பதி உயிர் தப்பினர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மைசூரு மாவட்ட மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்