மதுபானக்கடைக்கு அனுமதி வழங்க ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய கலால்துறை அதிகாரி கைது
தாணவகெரேயில் மதுபானக்கடைக்கு அனுமதி வழங்க ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய கலால்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த 3 பேரும் சிக்கினர்.
தாவணகெரே-
தாணவகெரேயில் மதுபானக்கடைக்கு அனுமதி வழங்க ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய கலால்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த 3 பேரும் சிக்கினர்.
மதுபானக்கடை
தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா டவுன் அமராவதி நகரை சேர்ந்தவர் ரகுநாத். இவர் ஹரிஹரா பகுதியில் மதுபானக்கடை அமைக்க முடிவு செய்தார். இதையடுத்து தாவணகெரே டவுனில் உள்ள கலால்துைற அலுவலகத்தில் மதுபானக்கடை அமைப்பதற்கு ரகுநாத் விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்பம் கலால்துறை முதன்மை அதிகாரி உதய் அசோக்கிடம் பரிசீலனைக்கு சென்றது.
இதையடுத்து, கலால்துறை அதிகாரி அந்த விண்ணப்பத்தை கிடப்பில் போட்டு விட்டார். இந்தநிலையில் ரகுநாத் கலால்துறை அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் மதுபானக்கடை அமைப்பதற்கு விண்ணப்பித்து இருந்தேன். அதற்கு எப்போது அனுமதி கிடைக்கும் என உதய் அசோக்கிடம் அவர் கேட்டார்.
ரூ. 3 லட்சம் லஞ்சம்
அதற்கு கலால்துறை அதிகாரி மதுபானக்கடை வைக்க அனுமதி வழங்குவதற்கு ரூ. 3 லட்சம் பணம் தர வேண்டும் என ரகுநாத்திடம் கூறினார். இதனை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என ரகுநாத் கூறினார். ஆனால் கலால்துறை அதிகாரி அதுஎல்லாம் எனக்கு தெரியாது ரூ. 3 லஞ்சம் கொடுத்தால் மதுபானக்கடை வைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என பிடிவாதமாக தெரிவித்தார்.
இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத ரகுநாத் இதுகுறித்து லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார். அப்போது லோக் அயுக்தா போலீசார் ரகுநாத்திடம் சில அறிவுரைகளை வழங்கி, ரசாயன பொடி தடவிய ரூ. 15 லஞ்சம் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். இதைடுத்து அவர் கலால்துறை அலுவலகத்திற்கு சென்று உதய் அசோக்கிடம் ரூ. 15 லட்சத்தை கொடுத்தார்.
4 பேர் கைது
அப்போது அங்கு மறைந்து இருந்த லோக் அயுக்தா போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் உடந்தையாக இருந்த கலால்துறை துணை அதிகாரி ஷிலா சைலஸ்ரீ உள்பட 3 பேரையும் லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து தாவணகெரே லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.