அரசு பள்ளி மாணவர்களுக்கு உரிய முறையில் பாடம் கற்பிக்கவேண்டும்: ஆசிரியர்களுக்கு, ரமேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிவுரை

அரசு பள்ளி மாணவர்களுக்கு உரிய முறையில் பாடம் கற்பிக்கவேண்டும் என்று ஆசிரியர்களுக்கு ரமேஷ் குமார் எம்.எல்.ஏ அறிவுரை வழங்கியுள்ளார்.

Update: 2022-07-26 17:29 GMT

கோலார் தங்கவயல்:

கோலார் மற்றும் சீனிவாசப்பூர் தாலுகாக்களில் உள்ள அரசு பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளின் வட்டார கல்வி அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் சீனிவாசப்பூர் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சீனிவாசப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் சபாநாயகருமான ரமேஷ்குமார் கலந்துகொண்டு பேசுகையில் கூறியதாவது:-

அரசுக்கு எவ்வளவு நிதி நெருக்கடி இருந்தாலும் பள்ளி-கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாதம் தவறாமல் சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதனால் ஆசிரியர்கள் சம்பளத்தை வாங்கிக்கொண்டு மாணவர்களுக்கு சரியாக பாடம் நடத்தாமல் இருப்பது துரோகத்திற்கு சமமானது. ஏழ்மை மாணவர்களை அதிகளவில், அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கிறார்கள். எனவே, அந்த மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் உரியமுறையில் பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்