பெங்களூருவில் 3-வது கட்ட கான்கிரீட் சாலை பணிகளுக்கு அரசு ஒப்புதல்

பெங்களூருவில் 3-வது கட்ட கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Update: 2022-06-03 15:00 GMT

பெங்களூரு:

அரசு ஒப்புதல்

பெங்களூருவில் முக்கியமான சாலைகள் கான்கிரீட் சாலைகளாக (ஒயிட் டாப்பிங்) மாற்றப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 2 கட்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் 3-வது கட்டமாக ரூ.1,154 கோடி மதிப்பீட்டில் 121 கிலோ மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் சாலை அமைக்க அரசு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் 89 ரோடுகள் மேம்படுத்தப்படுகின்றன. அதன்படி கப்பன் ரோடு (தபால் அலுவலகத்தில் இருந்து திக்கன்சன் ரோடு வரை), பி.இ.எல். ரோடு, எச்.எம்.டி. மெயின்ரோடு, மத்திகெரே மெயின் ரோடு, கத்திரிகுப்பே ரோடு, நாகரபாவி மெயின் ரோடு, மாகடி ரோடு மற்றும் ரெயில்வே நிலைய துணை ரோடு ஆகிய ரோடுகள் கான்கிரீட் ரோடுகளாக மாற்றப்படுகின்றன.

கான்கிரீட் சாலைகள்

பெங்களூரு மாநகராட்சிக்கு இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால், வளர்ச்சி பணிகளை அரசு விரைவுபடுத்தியுள்ளது. முதல்கட்ட திட்டத்தின்படி ரூ.972 கோடி செலவில் 96 கிலோ மீட்டர் நீளத்திற்கு 31 ரோடுகள் கான்கிரீட் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த பணிகள் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றன. 2-வது கட்ட பணிகள் 50 கிலோ மீட்டர் நீளத்திற்கு 38 ரோடுகள் ரூ.756 கோடியில் கான்கிரீட் சாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்