ரூ.50-க்காக நண்பர் கத்தியால் குத்திக்கொலை

பெங்களூருவில் ரூ.50-க்காக நண்பரை வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் நடந்து உள்ளது.

Update: 2022-06-22 15:13 GMT

பெங்களூரு:

ரூ.50-ஐ எடுத்தார்

பெங்களூரு லக்கரே பகுதியில் வசித்து வந்தவர் சிவமாது(வயது 24). இவர் ஆட்டோ டிரைவர் ஆவார். இதுபோல பசவேஸ்வராநகரில் வசித்து வருபவர் சாந்த

குமார்(24). சிவமாதுவும், சாந்தகுமாரும் சிறு வயது முதலே நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில் நேற்று இரவு பசவேஸ்வராநகர் குருபரஹள்ளி சர்க்கிள் பகுதியில் சிவமாதுவும், சாந்தகுமாரும் சந்தித்து பேசி கொண்டு இருந்தனர்.

அப்போது சாந்தகுமாரின் சட்டை பையில் இருந்த ரூ.50-ஐ சிவமாது எடுத்ததாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த சாந்தகுமார் ரூ.50-ஐ தந்து விடும்படி கேட்டு உள்ளார். ஆனால் ரூ.50-ஐ கொடுக்க சிவமாது மறுத்து உள்ளார். இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

வலைவீச்சு

இந்த சந்தர்ப்பத்தில் திடீரென ஆத்திரம் அடைந்த சாந்தகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிவமாதுவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த சிவமாது ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாந்தகுமார் தப்பி சென்று விட்டார். உயிருக்கு போராடிய சிவமாதுவை அப்பகுதி மக்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

இதையடுத்து சிவமாதுவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ரூ.50-க்காக இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து பசவேஸ்வரா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சாந்தகுமாரை வலைவீசி தேடிவருகின்றனர். ரூ.50-க்காக நண்பரை, வாலிபர் கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்