பெங்களூரு அருகே பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது

பெங்களூரு அருகே பெண் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். வேறொருவருடன் பழகியதால் கத்தியால் 15 முறை குத்திக்கொன்றது அம்பலமாகி உள்ளது.

Update: 2022-05-27 14:43 GMT

பெங்களூரு:

பெண் குத்திக் கொலை

பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா தாலுகா வடகேரி கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியம்மா. கூலி தொழிலாளி. கடந்த 15-ந் தேதி இவர், தனது வீட்டின் அருகே பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை மர்மநபர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்திருந்தனர்.

பாக்கியம்மாவை கொலை செய்தது யார்?, என்ன காரணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியாமல் இருந்தது. இதுகுறித்து தொட்டபெலவங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் பாக்கியம்மாவை, அதே கிராமத்தை சேர்ந்த ரியாஸ் பாஷா என்பவர் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

கள்ளக்காதலன் கைது

இதையடுத்து, தலைமறைவாக இருந்த ரியாஸ் பாஷாவை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஹரீஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த ரியாஸ் பாஷாவை கைது செய்துள்ளனர். அப்போது பாக்கியம்மாவுக்கும், ரியாஸ் பாஷாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதற்கிடையில், பாக்கியம்மாவுக்கு வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி ரியாஸ் பாஷாவுக்கு தெரியவந்ததும், கடந்த 15-ந் தேதி பாக்கியம்மாவின் வீட்டுக்கு சென்று, வேறொருவருடன் பழகுவது தொடர்பாக அவருடன் சண்டை போட்டுள்ளார். பின்னர் பாக்கியம்மாவை கத்தியால் 15 முறை சரமாரியாக குத்திக் கொலை செய்தது தெரியவந்தது. கைதான ரியாஸ் பாஷாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்