கர்நாடகத்தில் குரங்கு காய்ச்சல் பரவியதா? சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பதில்

கர்நாடகத்தில் குரங்கு காய்ச்சல் பரவியதா? என்பது குறித்த கேள்விக்கு சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பதிலளித்துள்ளார்.

Update: 2022-06-07 17:08 GMT

பெங்களூரு:

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பரிசோதனைகள்

கர்நாடகத்தில் குரங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் இதுவரை குரங்கு காய்ச்சல் பரவவில்லை. ஒருவேளை அந்த வைரஸ் பரவினால் உடனடியாக பரிசோதனைகளை தொடங்கும்படி அதிகாரி

களுக்கு உத்தரவிட்டுள்ளேன். அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் அந்த வைரசுக்கு சிகிச்சை அளிக்க தனியாக படுக்கைகள் ஒதுக்கப்படும்.

விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி சுற்றறிக்கை வெளியிடப்படும். குரங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் அத்தகைய நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும்படி அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

பயப்பட தேவை இல்லை

சர்வதேச விமான நிலையங்கள் அமைந்துள்ள பெங்களூரு புறநகர் மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்களின் சுகாதாரத்துறை அதிகாரிகள் விமான நிலைய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பயணிகளின் உடல்நிலையை பரிசோதிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது.

இதுகுறித்தும் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். அதனால் பொதுமக்கள் பயப்பட தேவை இல்லை. தகுதியானவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்