'தினத்தந்தி'புகார் பெட்டி செய்திகள்

கொள்ளையை தடுக்க மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2022-06-02 16:29 GMT

கொள்ளையை தடுக்க மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

பெங்களூரு பையப்பனஹள்ளி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து கே.ஆர்.புரம் சாலையில் பென்னிகானஹள்ளி பகுதியில் ஒரு நடைபாதை உள்ளது. அந்த நடைபாதையின் மீது தினமும் ஆயிரக்கணக்கானோர் நடந்து செல்கின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதை பகுதியில் மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவில் அந்த வழியாக நடந்து செல்பவர்களை மர்மநபர்கள் தாக்கி கொள்ளையடித்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தை தடுக்க அங்கு மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.

- ராஜேஸ்குமார், பென்னிகானஹள்ளி, பெங்களூரு.

பழுதடைந்து நிற்கும் வாகனத்தில் கொட்டப்படும் குப்பை

பெங்களூரு ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் அருகே நீண்ட நாட்களாக ஒரு சரக்கு வாகனம் பழுதடைந்து நிற்கிறது. ஆனால் அந்த வாகனத்தை அங்கிருந்து அகற்ற யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் அந்த சரக்கு வாகனத்தில் சிலர் இரவு நேரத்தில் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் சரக்கு வாகனம் முழுவதும் குப்பை பரவி கிடக்கிறது. சில நேரங்களில் நாய்கள், குப்பைகளை இழுத்து சாலையில் கொண்டு வந்து போடுகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதனால் அந்த வாகனத்தில் கிடக்கும் குப்பைகளையும், வாகனத்தையும் அங்கிருந்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அம்ஜத்கான், அனந்தராவ் சர்க்கிள், பெங்களுரு.

Tags:    

மேலும் செய்திகள்