சாலையோரம் உள்ள கேபிள் உருளை அகற்றப்படுமா?
பெங்களூரு ஒகலிபுரம் தன்வந்திரி ரோட்டில் சாலையோரமாக ராட்சத கேபிள் உருளை வைக்கப்பட்டு உள்ளது. அந்த ரோடு ஆரம்பிக்கும் இடத்தில் போக்குவரத்து சிக்னல் உள்ளது. சிக்னலில் நின்றுவிட்டு வாகனங்களை எடுக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் வேகமாக செல்லும் போது அந்த கேபிள் உருளையில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் அந்த கேபிள் உருளையை அங்கிருந்து உடனடியாக அகற்றப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கிறார்கள். இதுபற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
- சுதர்சனம், ஒகலிபுரம், பெங்களூரு.
நடைபாதையில் உள்ள பெரிய பள்ளம்
பெங்களூரு கோனனகுண்டே கிராஸ் வசந்தபுரா மெயின் ரோட்டில் ஒரு நடைபாதை உள்ளது. அந்த நடைபாதையின் ஒரு இடத்தில் பெரிய பள்ளம் விழுந்து உள்ளது. ஒரு ஆள் உள்ளே விழுந்து விடும் அளவுக்கு அந்த பள்ளம் உள்ளது. இரவில் அந்த நடைபாதையை கவனிக்காமல் வேகமாக நடந்து செல்பவர்கள் பள்ளத்திற்குள் விழும் அபாயமும் உள்ளது. இதனை தடுக்க அந்த பள்ளத்தை உடனடியாக மூட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வசந்த்குமார், கோனனகுண்டே கிராஸ், பெங்களூரு.