அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்
பெங்களூருவில் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளனர்.;
பெங்களூரு:
அமலாக்கத்துறை சார்பில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு நேரில் ஆஜராகும்படி நோட்டீசு அனுப்பியுள்ளது. இந்த நிலையில் இதை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம் பெங்களூரு சாந்திநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், "எங்கள் கட்சி தலைவர்களை அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை நோட்டீசு அனுப்பியுள்ளது. இதை கண்டித்து நாடு முழவதும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. பெங்களூருவிலும் நாளை ஆர்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். அமலாக்கத்துறையின் நோட்டீசை கண்டு நாங்கள் அஞ்சவில்லை" என்றார்.