மோட்டார் சைக்கிள் உருண்டு கம்ப்யூட்டர் என்ஜினீயர் சாவு

பெங்களூருவில் மோட்டார் சைக்கிள் உருண்டு கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலியானார்.;

Update:2023-10-15 00:15 IST

ஒயிட்பீல்டு:

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது 24). இவர், கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள தன்னுடைய சகோதரி வீட்டுக்கு சந்திரசேகர் வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் சந்திரசேகர் வெளியே புறப்பட்டு சென்றிருந்தார். பின்னர் நேற்று அதிகாலை 3 மணியளவில் நண்பரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிவிட்டு, ஒயிட்பீல்டில் உள்ள சகோதரி வீட்டுக்கு சந்திரசேகர் புறப்பட்டு சென்றார். ராமகொண்டனஹள்ளி மெயின் ரோட்டில் வரும் போது சந்திரசேகரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் பல்டி அடித்து உருண்டது.

இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சந்திரசேகர் தலையில் பலத்தகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். சந்திரசேகர் ஹெல்மெட் அணியாமலும், வேகமாகவும் சென்றதால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து பலியாகி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஒயிட்பீல்டு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்