ஜம்பு சவாரி ஊர்வலத்தை தொடங்கி வைக்கும் முதல்-மந்திரி சித்தராமையா
ஜம்புசவாரி ஊர்வலத்தை தொடங்கி வைக்க முதல்-மந்திரி சித்தராமையா இன்று மைசூரு செல்கிறார்.
பெங்களூரு:-
உலக புகழ் பெற்ற மைசூரு தசரா பண்டிகையின் முத்தாய்ப்பாக ஜம்பு சவாரி ஊர்வலம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த ஊர்வலத்தை முதல்-மந்திரி சித்தராயைா தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சித்தராமையா இன்று (திங்கட்கிழமை) மைசூரு செல்கிறார். காலை 11 மணிக்கு சாலை மார்க்கமாக மைசூரு புறப்படும் அவர் 12.30 மணிக்கு மைசூரு சென்றடைகிறார்.
நாளை மாலை 5 மணியளவில் ஜம்பு சவாரி ஊர்வலத்தை சித்தராமையா தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து 'டார்ச் லைட்' அணிவகுப்பில் அவர் பங்கேற்கிறார். இரவு மைசூருவில் தங்கும் அவர் 25-ந் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூரு வருகிறார். ஆகமொத்தம் சித்தராமையா மைசூரு மாவட்டத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சித்தராமையா வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.