அக்னிபத் திட்டத்திற்கு எதிராக முழு அடைப்புக்கு அழைப்பு- 150 இளைஞர்கள் கைது

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக முழு அடைப்புக்கு அழைப்புவிடுத்து பெலகாவியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 150 இளைஞர்கள் போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-06-20 22:49 IST

பெங்களூரு:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், அந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெலகாவி மாவட்ட இளைஞர்கள் நேற்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். இதையடுத்து, பெலகாவியில் நேற்று முழு அடைப்பு நடைபெறுவதை தடுக்கவும், அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கவும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. முழு அடைப்பில் கலந்துகொள்ள பாகல்கோட்டை, கதக் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் இளைஞர்கள் வந்திருந்தனர். ஆனால் பெலகாவி டவுனில் உள்ள ரெயில், பஸ் நிலையங்கள், சென்னம்மா சர்க்கிளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

பாதுகாப்பு பணியில் அதிவிரைவு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தாலும், பெலகாவி டவுனில் வழக்கம் போல் கடைகள் திறக்கப்பட்டு இருந்ததுடன், பஸ்களும் எப்போதும் போல ஓடியது. இந்த நிலையில், பஸ், ரெயில் நிலையம், சென்னம்மா சர்க்கிளில் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக இளைஞர்கள் திரண்டு இருந்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இளைஞர்ககளை போலீசார் கைது செய்து, கர்நாடக ஆயுதப்படை பயிற்சி பள்ளிக்கு அழைத்து சென்றார்கள். சுமார்

150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்