மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டின் இறையாண்மை அபாய நிலையில் உள்ளது

மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டின் இறையாண்மை அபாய நிலையில் உள்ளது என்று ஓய்வு பெற்ற நீதிபதி நாகமோகன் தாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-25 17:24 GMT

பெங்களூரு:

பெங்களூரு காந்திபவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓய்வு பெற்ற நீதிபதியான நாகமோகன் தாஸ் பேசியதாவது:-

நமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் நாட்டுக்கு உள்ளேயும், சர்வதேச அளவிலும் ஏற்படும் பிரச்சினைகளில் தைரியமாக குரல் கொடுக்க முடியாத நிலையில் மத்திய அரசு இருக்கிறது. தற்போது சில பெரும் முதலாளிகளின் கையில் இந்த நாடு சிக்கியுள்ளது.

நாட்டில் மதம் மற்றும் அரசியல் ரீதியாக வளர்ச்சி அடைபவர்கள் கைது செய்யப்பட்டும், மிரட்டப்பட்டும் வருகின்றனர். பதவி அதிகாரத்தில் இருப்பவர்கள், சில சமுதாய மக்களின் வாழ்வை துஷ்பிரயோகம் செய்கிறார்கள். இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது அமலுக்கு வந்த அவசர நிலை காரணமாக நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றது.

தற்போது அதை விட 20 மடங்குக்கு அறிவிக்கப்படாத அவசர நிலை நமது நாட்டில் உள்ளது. பதவி, அதிகாரத்தில் இருக்கும் அரசே சாதி, மதம் என்ற பெயரில் மக்களிடையே பிளவை ஏற்படுத்துகிறது. இதுபோன்று மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டின் இறையாண்மை அபாய நிலையில் உள்ளது.

இவ்வாறு நாகமோகன் தாஸ் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்