சி்க்பள்ளாப்பூரில், இருவேறு இடங்களில் திருட்டு வழக்கில் 4 பேர் கைது

சிக்பள்ளாப்பூரில் இருவேறு இடங்களில் நடந்த திருட்டு வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update:2022-08-08 23:20 IST
சி்க்பள்ளாப்பூரில், இருவேறு இடங்களில்    திருட்டு வழக்கில் 4 பேர் கைது

சிக்பள்ளாப்பூர்:

சிக்பள்ளாப்பூர் நகர் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருவேறு இடங்களில் சந்தேகம் எழும் வகையில் சுற்றித்திரிந்த 4 பேரை பிடித்து தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 4 பேரும், பொதுஇடங்களில் சாலையோரம் நிற்கும் இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலம் இந்துப்பூர் நகர் ரஹமத் பகுதியை சேர்ந்த நவீன்(வயது 23), அல்லிமுல்லா (20) மற்றும் தஹபாஜ் (20) மற்றும் சிக்பள்ளாப்பூரை சேர்ந்த கேக்காகவுஸ்(61) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.11½ லட்சம் மதிப்பிலான 23 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்