வாகனங்கள் திருடிய ஆந்திராவை சேர்ந்தவர் கைது; 45 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

வாகனங்கள் திருடியதாக ஆந்திராவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 45 மோட்டார் சைக்கிள்களை போலீசார் மீட்டனர்.

Update: 2022-06-04 16:02 GMT

பெங்களூரு:

பெங்களூரு பேகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி மோட்டார் சைக்கிளுக்கு உரிய ஆவணம் கேட்டனர். ஆனால் அந்த நபரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் அந்த நபரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் ஆந்திராவை சேர்ந்த அனுமந்தரெட்டி என்பதும், அவர் பெங்களூருவில் வீடுகள், கடைகள் முன்பு நிறுத்தப்பட்டு இருக்கும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடி ஆந்திராவுக்கு கொண்டு சென்று குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதனால் அனுமந்தரெட்டி கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்பேரில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 45 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.கைதான அனுமந்தரெட்டி மீது பேகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்