குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

குடிப்பழகத்திற்கு அடிமையானவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2022-08-24 22:50 IST

உப்பள்ளி:

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா கிரேஒசூர் கிராமத்தை சேர்ந்தவர் லிங்கப்பா பீமப்பா கம்பளி(வயது 45). தொழிலாளியான இவர், அளவுக்கு அதிமாக மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இந்த குடிப்பழக்கத்தால் லிங்கப்பா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமாகவில்லை.

இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அவர் தனக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உப்பள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்