பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஷூ, சாக்ஸ் வழங்க ரூ.132 கோடி ஒதுக்கீடு; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஷூ, சாக்ஸ் வழங்க ரூ.132 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2022-07-08 15:27 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஷூ மற்றும் சாக்ஸ் வழங்க அரசிடம் பணம் இல்லாததால், மாநிலம் முழுவதும் உள்ள மக்களிடம் பிச்சை எடுத்து ஷூ மற்றும் சாக்ஸ் வழங்க காங்கிரஸ் கட்சி தயாராக இருப்பதாக டி.கே.சிவக்குமார் கூறி இருந்தார். இதுபற்றி பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

மாநிலத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஷூ மற்றும் சாக்ஸ் வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் மக்களிடையே தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு ஷூ மற்றும் சாக்ஸ் வழங்குவதற்காக மாநில அரசு ரூ.132 கோடி ஒதுக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அரசு நிதி ஒதுக்கி இருப்பதால் கூடிய விரைவில் மாணவ, மாணவிகளுக்கு ஷூ மற்றும் சாக்ஸ் வழங்கப்படும். எனவே ஷூ, சாக்ஸ் வழங்குவதற்காக காங்கிரஸ் கட்சியினர் பிச்சை எடுக்க வேண்டாம். இதற்கு முன்பு கொரோனா தீவிரமாக இருந்த போதும் மக்களுக்கு உதவி செய்வதாக கூறி ரூ.1 கோடி பெற்றனர். அந்த பணம் எங்கு சென்றது என்று தெரியவில்லை.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்