தேவனஹள்ளியில் ஒரு கிலோ மீட்டர் நீள தேசிய கொடியுடன் ஊர்வலம்; மந்திரி சுதாகர் தொடங்கி வைத்தார்

தேவனஹள்ளியில் ஒரு கிலோ மீட்டர் நீள தேசிய கொடியுடன் ஊர்வலத்தை மந்திரி சுதாகர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-08-14 16:01 GMT

பெங்களூரு:

பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் மாணவர்கள் அமைப்பினர் 'ஹர் கர் திரங்கா' இயக்கத்தையொட்டி ஊர்வலம் நடைபெற்றது. மாணவர்கள் ஒரு கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசிய கொடியை சுமந்தபடி சென்று மக்களின் கவனத்தை ஈர்த்தனர். இந்த ஊர்வலத்தை சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தொடங்கி வைத்து பேசியதாவது:-

நமக்கு சுதந்திரம் பலரின் தியாகத்தால் கிடைத்தது. சமத்துவம், சமூக நீதி, சகோதரத்துவம் உள்ளிட்டவற்றை நாம் உறுதி செய்துள்ளோம். இத்தகைய நிகழ்ச்சிகளில் தேசபக்தி மற்றும் நாட்டின் மீதான பற்று அதிகரிக்கும். ஒவ்வொருவரும் தேசபக்தியை வெளிப்படுத்த தங்கள் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மீது தேசிய கொடி ஏற்ற வேண்டும்.

இறப்புக்கு பிறகு உடல் உறுப்புகள் மண்ணோடு மண்ணாகி போகின்றன. அந்த உறுப்புகளை தானம் செய்தால் பிறருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். ஒருவரின் உறுப்புகள் தானம் செய்தால் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கும். இந்த விஷயத்தில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்