வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத விவசாயி: சாதி பெயரை கூறி திட்டிய 2 பேர் கைது

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத விவசாயியை சாதி பெயரை கூறி திட்டியதாக 2 பேரை போலீசாா் கைது செய்தனர்.;

Update:2022-08-28 22:59 IST

கோலார் தங்கவயல்:

சிக்பள்ளாப்பூர் தாலுகா ஷெட்டிகெரே கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாஸ். விவசாயியான இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மோட்டார் சைக்கிளுக்கான கடன் பெற்று இருந்தார். இந்த நிலையில் கடன் தொகை ரூ.11 ஆயிரத்திற்கான காசோலையை தனியார் நிதி நிறுவனத்திற்கு சீனிவாஸ் கொடுத்திருந்தார். ஆனால், சீனிவாசின் வங்கி சேமிப்பு கணக்கில் பணம் இல்லாததால் காசோலை வங்கி அதிகாரிகள் திருப்பி கொடுத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அனில் மற்றும் ருத்ரப்பா ஆகிய இருவரும் செல்போனில் சீனிவாசை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது சீனிவாசை, அவர்கள் சாதி பெயரை குறிப்பிட்டு தகாத வாா்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனை சீனிவாஸ் பதிவு செய்து வைத்தார். மேலும், அவர் அதுகுறித்து சிக்பள்ளாப்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் அனில் மற்றும் ருத்ரப்பாவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்