69 வயது மூதாட்டியை பலாத்காரம்

மேற்கூரை ஜன்னலை உடைத்து வீடு புகுந்து 69 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து ஹாசன் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.;

Update:2023-10-27 04:08 IST

ஹாசன்:-

இந்த வழக்கு பற்றிய விவரம் பின்வருமாறு:-

மூதாட்டி பலாத்காரம்

கர்நாடக மாநிலம் ஹாசன் தாலுகா கட்டையா அருகே பனவாசே கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 26). அதே கிராமத்தில் 69 வயது மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 29-ந்தேதி ரமேஷ், மூதாட்டியின் வீட்டு மேற்கூரை ஜன்னலை கல்லால் தாக்கி உடைத்து உள்ளே புகுந்துள்ளார்.

பின்னர் மூதாட்டி என்றும் பார்க்காமல் அவர் கொடூரமான முறையில் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதாவது உடல் உறுப்புகளை கடித்து வைத்து பலாத்காரம் செய்தார். பின்னர் அங்கிருந்து ரமேஷ் தப்பி ஓடிவிட்டார்.

கைது

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டி ஹாசன் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ரமேஷ் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 44, 323, 341, 376, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பாக வழக்கு ஹாசன் மாவட்ட 2-வது கூடுதல் மற்றும் செசன்சு கோர்ட்டில் தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.ஏ.ஹிதாயத் உல்லா ஷெரீப் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இதில் வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி நேற்று முன்தினம் அதிரடி தீர்ப்பு அளித்தார்.

10 ஆண்டு கடுங்காவல் சிறை

அதாவது மூதாட்டியை கொடூரமான முறையில் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டு ரமேஷ் மீது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்